Sunday, April 19, 2015

SMART டிவி இல்லையா கவலை இல்லை (Media Players to convert Ordinary TV to SMART TV)

முன்னுரை:-

      நம்மில் பலரிடம் smart டி.வி இல்லை என்ற கவலை இருக்கும். நானும்  அப்படி கவலை பட்டதுண்டு. ஆனால் அந்த கவலையை போக்க தற்பொழுது ஒரு சுலபமான வழி வந்துள்ளது. அதுதான்  மீடியா players என்ற ஒரு சிறு பெட்டி. இந்த கருவியை நாம் வாங்கி நமது சாதாரண டி.வியுடன் இணைத்தால்  Smart டி.வி தயார். இதற்காக நாம் பெரும் செலவும் மேற்கொள்ள தேவையில்லை. சில ஆயிரம் ரூபாயில் இந்த கருவியை நாம் வாங்க முடியும். ஆனால் இந்த கருவியை இந்தியாவில் பயன்படுத்த இன்டர்நெட் வேகம் (சராசரி) பெரிதும் உதவாதென்றே சொல்லலாம். குறைந்தது 2 MBP s வேகம் தேவைப்படும். மேலும் உபயோக அளவு (limit)இருக்கக் கூடாது. ஏனென்றால்  இந்த கருவியிலுள்ள சேவைகளை பயன்படுத்த internet
வசதி தேவைப்படும். US  மற்றும் UK  நாடுகளில் இந்த கருவிகளின் பலவிதமான சேவைகளை நாம் பயன்படுத்தலாம்.இந்தியாவில் NETFLIX போன்ற சேவைகள் பயன்படுத்த முடியாததால் பெரும்பாலும் Youtube  அல்லது USB மூலம் நமது நமது கணினியில் உள்ள படங்களை பார்க்க மட்டுமே உதவும்.இந்த கருவிகளை நமது தொலைக்காட்சிப்பெட்டியில் இணைக்க இரு வழிகள் உள்ளத்.

1) LCD /LED டி.வி :- நாம்   LCD /LED டி.வியை HDMI கேபிள் மூலம் இக்கருவியில் இணைக்கலாம்.WiFi மூலம் இக்கருவியை செட்அப் செய்து இதன் சேவைகளை கண்டு  களிக்கலாம்.

2) பழைய டி .வி :-  LCD /LED டி.வி இல்லையென்றால் நாம் காம்பொசிட்(Composite) கேபிள் மூலம் இணைக்க வசதி உண்டு.


1)Chrome Cast (குரோம் காஸ்ட் )

                      கூகிள் நிறுவனத்தின்  தயாரிப்பான இது ஒரு சிறு USB போன்ற கருவியாகும். இக்கருவியை  நாம் நமது டி.வியின் HDMI போர்ட்டில் மட்டுமே இணக்க முடியும். நமது ஆண்டுராயிட் தொலைபேசி, டாப்லெட் (Tablet ), i phone, i pad, Mac மற்றும்  விண்டோஸ் லேப்டாப் மூலம் நமது பிடித்தமான நிகழ்சிகளை டி.வியில் கண்டு மகிழலாம். நமது மொபைலை மிறர் (mirror )  - அப்படியே டி.வியில் இயக்கும் வசதி உள்ளது. கேம்  மற்றும் பல சேவைகளை உள்ளடக்கி இருக்கின்றது. விலையும் மிக குறைவு.




2)ஆப்பிள் டிவி :

                      ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பான ஆப்பிள் டிவி உங்களுக்கு பலவித பொழுதுபோக்கு, திரைப்படங்கள், இசை மேலும் பலவிதமான காரியங்களை சாத்தியமாக்கின்றது. மேலும் உங்களது I-Phone அல்லது MAC கம்யூட்டர்களை    டிவியில்கண்டு இயக்கலாம் . நமது I phone இல் உள்ள படங்கள், வீடியோ பல்லாயிரக்கணக்கான டிவி நிகழ்சிகள் , திரைப்படங்கள், I Tunes இல்  உள்ள நிகழ்சிகள் இவையல்லாம்   1080p  HD வடிவில் நீங்கள் கண்டு களிக்கலாம். மேலும் Netflix ( இந்தியாவில் தற்பொழுது இல்லை ), You tube, Flickr மேலும் பல சேவைகளை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.



Air Play:

                      நமது I pad, Iphone இல் இருந்து நாம் கேம் விளையாட, படங்களை நாம் wireless மூலம் டிவி இல் கண்டு மகிழலாம். ஆனால் உங்களது USB, portable hard disc யை  நீங்கள் இதனுடன் இணைக்க இயலாது.

3) Western Digital TV

                     Western Digital நிறுவனத்தின் படைப்பு இது. நீங்கள் உங்களது டிவியில் இணைத்து பலவித சேவைகளை அனுபவிக்கலாம்.மிகவும் எளிதாக நமது டி .வி யுடன் இணைத்துக் கொள்ளலாம் .நெட் பிலிக்ஸ் (Netflix ),  யூடியூப்  (Youtube ) போன்ற  ஆப் (App ) களை உள்ளடக்கி உள்ளது.மேலும் எளிதாக்க நமது செல்பேசியில் ஒரு ஆப் (App) பதிவிறக்கி நாம் இக்கருவியை சுலபமாக இயக்க முடியும் . USB இணைக்க இக்கருவியில் வசதி உள்ளது .இதனால் நமது கணினியில் இருந்து திரைப்படங்கள்,புகைப்படங்கள் ,விடியோக்களை பெரிய திரையில் கண்டு களிக்கலாம் .


4)Roku டிவி :

இது மற்றொரு நிறுவனத்தின் தயாரிப்பாகும். WD பெட்டியில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. மேலும்  சில  டி.விகளில் இதை உள்ளே வைத்து தயாரிக்கப்படுகின்றது.









0 comments:

Post a Comment